Saturday, March 29, 2014

அமெரிக்காவில் 81,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இந்திய நிறுவனங்கள்



அமெரிக்காவில், கடந்த 2013–ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 81,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளதாக இந்திய தொழிலக கூட்டமைப்பின் அண்மைக்கால ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 40 மாகாணங்களில் 68 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூ ஜெர்ஸி, கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் இந்திய நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்துமாக அங்கு மேற்கொண்டுள்ள மொத்த முதலீடு 1,700 கோடி டாலராகும். இந்திய நிறுவனங்கள் அதிகமான அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் ஐந்து நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்று பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டாட்டா குழும நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. டாட்டா குழுமத்தால் மட்டும் அங்கு 30–க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மகிந்திரா குழுமம் கலிபோர்னியா, ஜார்ஜியா, கான்சாஸ், பென்சில்வேனியா, டென்னஸி மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
Source By:- Daily Thanthi

No comments:

Post a Comment