Saturday, January 17, 2015

என் அன்பிற்கினிய தோழர்களே, தோழிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !
 
TASK FORCE (இலாக்க சீரமைப்பு கமிட்டி)   ஒரு கண்ணோட்டம்:-

  மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த UPA அரசாங்கம் நம்மை கண்டு கொள்ளாத பட்சத்தில் தற்போதுள்ள திரு.நரேந்திரமோடி தலைமையிலான NDA அரசாங்கம் மேற்படி உயர்மட்ட கமிட்டியை கடந்த அக்டோபர் மாதம் நியமித்தது. இதில் தலைவராக (CHAIRMAN)  திரு.T S R சுப்பிரமணியன் Retired Cabinet Secretary  உறுப்பினர்களாக...

1.       Shri T V Mohandosspai, Chairman of Manipal Global Education, Bangalore Infosys Director.
2.       Shri G.N. Vajbai, Ex-SEBI Chairman, Mumbai.
3.       Dr. Ravindra, A Distingunished leader in Indian Business.
4.       Shri H.Dholakia, Economic Professor, IIM, Ahamadabad.
5.       Shri. R.S. Sharma, Secretary Department of Electronics.
6.       Shri L.C.Goyal, Secretary, Department of Rural Development.
7.       Shri Rakesh Garg, Secretary, Department of Tele Communication.
8.       Smt. Kavery Banerjee, Secretary, Department of Post.
9.       Shri Kamaleshwar Prasad, Retired Member Operation, Postal Board.
10.   Shri Vasumitra, Chief PMG, Delhi Circle.

அஞ்சல் துறை வரலாற்றில் இதற்க்கு முன் இப்படி ஒரு உயர்மட்ட கமிட்டி அமைக்கபட்டதில்லை. இதற்க்கான ஆலோசனையில் பிரதமர் சுமார் 1 மணி நேரம் செலவிட்டதாக நமது துறை அமைச்சர் திரு .ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்த கமிட்டியின் வேலை
1.  அஞ்சல் துறையை மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கேற்ப கணினி மயமாக்கி நவீனபடுத்த ஆலோசனை வழங்குதல்.
2.  நாட்டின் சிறிய,பெரிய நகரங்களில் மற்றும் கிராமப்புறங்களில் மத்திய,மாநில அரசுகளின் நலத்திட்டங்களை வழங்கும் மையங்களாக மாற்றுதல்.
3.        வங்கி மற்றும் காப்பீட்டு பணிகளை விரிவு படுத்துதல்.

31-12-2014 க்குள் இக்கமிட்டி தனது ஆலோசனைகளை வழங்கிட பணிக்கப்பட்டது. நாமெல்லாம் மகிழ்ந்தோம். இனி அஞ்சல் துறைக்கு யோகம்தான் என்று. ஆனால் அதன் பரிந்துரைகள் அஞ்சல் துறைக்கு ஆப்பு வைக்கும் விதமாகவே தரப்பட்டுள்ளன. இதன்படி நமது அஞ்சல் இலாக்காவின் பணிகள் 6  யூனிட்டுகளாக பிரிக்கப்படும் அவைகள் பின்வருமாறு.....

1.        வங்கி மற்றும் நிதிச்சேவைகள்.
2.        காப்பிட்டு சேவைகள்.
3.        தனி நபர் பணிகளை மேற்கொள்ளுதல்.
4.        மத்திய, மாநில அரசுகளின் பணிகளை செய்தல்.
5.        பார்சல் போக்குவரத்து.
6.        கடிதப் போக்குவரத்து.
இதில் முதல் ஐந்தும் பிரதான தொழில் முனையங்கள் STRATEGIC BUSINESS UNIT ஆக இருக்கும். ஆறாவதாக உள்ள கடிதப் போக்குவரத்து முனையம் பொது மக்களுக்கான குறைந்த செலவில் தபால் சேவைகளை வழங்கும். காலப்போக்கில் மேற்கூறிய முதல் ஐந்து முனையங்களும் கீழ்க்காணும் கம்பெனிகளாக மாற்றப்படும்.
1.        Company for Banking & Financial Services (Post Bank of India).
2.        Company for Insurance (India Insurance).
3.        Company for distribution of Third Party Products.
4.        Company for management of government Services.
5.        Company for Parcel & Packets (India Parcel).   
இவை பின்னர் Corporationகளாக மாற்றப்பட்டு பங்கு சந்தையில் பட்டியல் இடப்படும். தோழர்களே, தோழிகளே காலபோக்கில் India Postஇல்லாத Post ஆகிவிடும். திரு. நரேந்திரமோடி நம்மீது காட்டும் அக்கரை கசாப்பு கடைக்காரன் பலி ஆட்டின் மீது காட்டும் அக்கரை போன்றது. நாம் ஏமார்ந்து விடக் கூடாது. ஈடி ஊழியரை இலாக்க ஊழியராகும் நிலைமை மாறி இலாக்க ஊழியர் ஈடி ஊழியராகும் அவலத்தில் முடிந்தாலும் முடியலாம்.
“யாரையும் வீட்டுக்கு அனுப்பமாட்டோம் சம்பளம் குறையாது-பென்ஷன் உண்டு என்ற அரசின் உறுதிமொழியை நம்ப முடியாது. ஏன் எனில்  இதே உறுதிமொழியை நம்பிய நமது TELECOM  BSNL தொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன?  கடந்த மூன்று ஆண்டுகளாக போனஸ் இல்லை, LTC இல்லை  மற்றும் ஒரு லட்சம் பேர் VRS ல் போக நெருக்குதல்.
        இந்த நிலைமை நாளை நமக்கும் கண்டிப்பாக வரலாம். வெள்ளம் வரும் முன் அணை  கோலுவோம்.  வரும் முன் காப்போம். நம் இலாக்காவை காப்பாற்றுவோம். பாரம்பரியமிக்க ஒரு துறை கார்பொரெட் நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்படுவதை நாம் அனுமதிக்ககூடாது. நம் பிணக்குகளை பேசிக்கொண்டு இருக்க இது நேரமில்லை. ஒன்றுபடுவோம். ஒற்றுமையே பலம்.

                “If we fail to Hang together, We Will Hang Separately” என்ற Winston Churchil-ன் வாசகங்களையும் “ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவருக்கும் தாழ்வு“ என்ற நம் பாரதியின் வார்த்தைகளையும் நினைவில் கொள்வோம். வருகின்ற 06-05-2015 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தம். சம்பள உயர்வல்ல நமது நோக்கம். இலாக்காவை தக்கவைப்பதுதான் நமது நோக்கம்.
படைப்பு :- செயலர், திருவண்ணாமலை கோட்ட சங்கம்.

B.செல்வகுமார் 
கோட்ட செயலர் 
தாம்பரம் கோட்ட சங்கம்.  

No comments:

Post a Comment