வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: மும்பையில் இன்று பேச்சுவார்த்தை
By DN, சென்னை
First Published : 06 January 2015 02:34 AM IST
ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பாக புதன்கிழமை (ஜன.7) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்கிடையே, இந்த பிரச்னை தொடர்பாக மும்பையில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகைளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை வங்கி உயர் அதிகாரிகள் அமைப்பு (ஐபிஏ) ஏற்காததால், ஜனவரி 7-ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இன்று பேச்சுவார்த்தை: இந்த நிலையில், இந்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் அமைப்புடன் (ஐபிஏ), வங்கி ஊழியர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் (யுஎஃப்பியு) மும்பையில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment