Friday, January 2, 2015

தனியார் கம்பெனிகள் பெயரில் ரயில்கள் இயக்க முடிவு: தள்ளாடும் துறையை தாங்கி பிடிக்க வல்லுனர் குழு பரிந்துரை
Advertisement

மாற்றம் செய்த நாள்

02ஜன
2015 
00:05
பதிவு செய்த நாள்
ஜன 01,2015 23:40
புதுடில்லி: பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களில் ரயில்களை இயக்கவும், நிறுவனங்களின் பெயர்களில், ரயில் நிலையங்களை செயல்படுத்தவும் ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், வருவாயை பெருக்கி, தள்ளாடும் ரயில்வே நிர்வாகத்தை தூக்கி நிறுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.ரயில்வே துறை அமைச்சராக, பா.ஜ.,வை சேர்ந்த சுரேஷ் பிரபு உள்ளார். ரயில்வே துறையின் நடைமுறை செலவு, 95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், கிடைக்கும் வருவாய் அனைத்தையும், செலவு செய்ய வேண்டியுள்ளதால், புதிய திட்டங்களுக்கும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதிலிருந்து மீள, என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய, நிதித் துறையின் முன்னாள் செயலர், டி.கே.மிட்டல் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, சில பரிந்துரைகளை செய்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்களாவன:

* கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களில், ரயில்களை இயக்குவது. அதற்காக, குறிப்பிட்ட தொகையை, அந்த நிறுவனங்களிடம் இருந்து பெறுவது.

* கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களில், ரயில்வே நிலையங்களை செயல்படுத்துவது. இதன் மூலம், அந்த ரயில் நிலையத்தின் பராமரிப்பு மற்றும் அனைத்து செலவுகளையும், அந்த நிறுவனங்களே மேற்கொள்ளச் செய்வது.

* முதற்கட்டமாக, 200 ரயில் நிலையங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர்களில் செயல்படும். உதாரணமாக, அமுல் ரயில் நிலையம், பிளிப்கார்ட் ரயில் நிலையம் என்ற பெயர்களில், ரயில் நிலையங்கள் செயல்படுத்தப்படும்.

* இத்தகைய முறைகளில், ஆண்டுக்கு, 8,000 கோடி ரூபாய் திரட்டுவது. 'ரயில்வே துறை, எந்த காரணத்தை கொண்டும் தனியார்மயமாக்கப்படாது' என, பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். ஆனால், அந்த துறையின் பல செயல்பாடுகள், தனியார்மயத்தை நோக்கி பயணிக்கின்றன என்பது, இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

நிதி நிலைமை மோசம்

* ரயில்வே துறையின் நடைமுறை செலவு 95 சதவீதம்.

* முடங்கிக் கிடக்கும் திட்டங்கள், 2.5 லட்சம் கோடி ரூபாய்.

* கட்டண உயர்வு இல்லாமல், 10 - 20 சதவீத வருவாய் கூட்ட இலக்கு.

* பிற நாடுகளின் ரயில்வே துறைகள், 35 சதவீதத்திற்கும் அதிகமாக, கட்டணம் இல்லாத 

பிற துறைகளின் வழியே உள்ளன.

* 10 லட்சம் ஏக்கர் நிலங்கள், ரயில்வே துறையின் பயன்பாட்டில் உள்ளன. புதிதாக, ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களை, ரயில்வே துறை பயன்பாட்டில் கொண்டு வர திட்டம்.

* இதற்காக, பயன்படுத்தப்படாத, சீரமைக்கப்படாத ரயில்வே பணியாளர் குடியிருப்புகளை இடித்து விட்டு, அந்த இடங்களை தனியாருக்கு வாடகைக்கு விடுவது.

* தண்டவாளங்கள் அருகில் உள்ள நிலங்களில், பணப்பயிர்கள் சாகுபடி செய்ய, குத்தகைக்கு விடுவது.

* ரயில் நிலைய கட்டடங்கள், கூரைகளின் மேல், சூரிய மின்சக்தி தகடுகள் வேய, வாடகைக்கு விடுவது போன்றவற்றின் படி, நிதி ஆதாரத்தை பெருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment