தொழிற்சாலைகள் மூடலில் தமிழகம் முன்னிலை
மாற்றம் செய்த நாள்
12ஜன2015
00:50
பதிவு செய்த நாள்
ஜன 12,2015 00:30
ஜன 12,2015 00:30
புதுடில்லி : பொருளாதார நெருக்கடி காரணமாக, பல்வேறு தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டதால், கடந்த 2012-13ம் ஆண்டில், இந்தியா முழுவதிலும், 4 லட்சம் பேர் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக, தொழிற்சாலை வருடாந்திர தற்காலிக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைப்பு சார்ந்த ஒட்டு மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியாக இருந்த நிலையில், தற்போது, 96 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, உணவு, ஜவுளி, ஆயத்த ஆடைகள், உலோகம், கனிமம் ஆகிய ஐந்து துறைகளில் மட்டும் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தயாரிப்பு துறை முடங்கி போனது, நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு, ஒப்பந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு வழிகோலியுள்ளது. கடந்த 2012-13ம் ஆண்டில், அதிகளவில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களின் பட்டியலில், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
குறிப்பாக, மின் தட்டுப்பாடு காரணமாக, தமிழக தொழிற்சாலைகள் அதிகளவில் மூடப்பட்டதையடுத்து, வேலை இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், ஆந்திராவில், 11 சதவீத பணியாளர்கள், வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment