Wednesday, January 7, 2015


கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
Advertisement

மாற்றம் செய்த நாள்

07ஜன
2015 
00:41
பதிவு செய்த நாள்
ஜன 06,2015 23:39
கோல்கட்டா: கோல் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த, 3.5 லட்சம் தொழிலாளர்கள், நேற்று முதல், ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், பல மாநில மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதை நிறுத்த வேண்டும்; அந்த நிறுவனத்தை படிப்படியாக, தனியார் மயமாக்க முற்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த, 3.5 தொழிலாளர்கள், நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர், பியூஷ் கோயல், கடந்த 3ம் தேதி, கோல் இந்தியா நிறுவன தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதை புறக்கணித்த, பா.ஜ.,வின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கம், ஐ.என்.டி.யு.சி., - ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., மற்றும் எம்.எம்.எஸ்., தொழிற்சங்கங்கள், இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. கோல் இந்தியா நிறுவனத்தின் முழு நேர தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதிர்தா பட்டாச்சார்யா, நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், இந்த வேலைநிறுத்தம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநில அனல்மின் நிலையங்கள், ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையில் தவிப்பதால், கடந்த சில நாட்களாக, கோல் இந்தியா நிறுவனம், வழக்கத்திற்கு மாறாக, 4,000 டன் நிலக்கரியை, கூடுத லாக வெட்டி எடுத்து அனுப்பி வந்தது.

இந்த சூழ்நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் துவங்கி உள்ளதால், வழக்கமாக நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும், 15 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, சில நாட்களாக கூடுதலாக வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி உற்பத்தியும் பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பல மாநில மின் நிலையங்களில், நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. ஏனெனில், மத்திய மின் ஆணைய தகவல்படி, ஜனவரி முதல் தேதியன்று, 20க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில், நான்கு நாட்கள் தேவைக்கு குறைவான நிலக்கரியே கையிருப்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source By Dhinamalar

No comments:

Post a Comment