Wednesday, November 12, 2014

SUCCESS TO CIRCLE UNION EFFORTS ON IMPLEMENTING REVISED HSG I RECTT RULES IN TN.


தோழர்களின் கோரிக்கைகளை ஏற்று உடன் 
செயல் பட்ட மாநில சங்க மாநில  செயலராகிய
தோழர் J Ramamurthy அவர்களுக்கு தாம்பரம் 
கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும்,
 நன்றியனையும்  தெரிவித்துகொள்கிறோம் .
மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !

அன்புத்  தோழர்களுக்கு வணக்கம். நாம் ஏற்கனவே கடந்த 24.09.2014 அன்று நடந்த CPMG  உடனான நேர்காணலில், HSG  I  RECTT  RULES  IMPLEMENT  செய்வது குறித்து கடிதம் அளித்து பேசியிருந்தோம். அதன் கடித நகல் மீண்டும்  உங்கள் பார்வைக்கு கீழே அளிக்கப் பட்டுள்ளது. 

இதன் செயலாக்கம் குறித்து சில விளக்கங்களை DTE க்கு கேட்டு அனுப்புவதாகவும், பதில் கிடைத்தவுடன்  அதன் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் CPMG அவர்கள்   உறுதியளித்திருந்தது  உங்களுக்கு நினைவிருக்கும். 

தொடர்ந்து இது குறித்து நாம் நினைவூட்டு அளித்து வந்தோம்.மேலும்  நம்முடைய பொதுச் செயலாளர் தோழர். N .S . அவர்களிடமும் இது குறித்து DTE  இல்  பேசிட கோரியிருந்தோம் . தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக  IP LINE  POSTMASTER பதவிகளில் இருந்த  ASP  அனைவரும் தற்போது இடமாற்றம் செய்து உத்திரவிடப்பட்டிருக்கிறார்கள்  என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 

அதற்கான  உத்திரவின் நகல் கீழே அளிக்கப் பட்டுள்ளது. இனி இரண்டாவது கட்டமாக இந்தப் பதவிகள் நாம் நம்முடைய கடிதத்தில் கேட்டிருந்த வண்ணம்  GENERAL LINE  OFFICIAL  கொண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டு நிரப்பப்பட  உரிய நடவடிக்கை எடுக்கப் படும் .

 இந்த உத்திரவினை அளித்த CPMG திரு. மூர்த்தி   அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட   AD STAFF  திரு . ஆறுமுகம் அவர்களுக்கும் DTE  இல் இது குறித்து நடவடிக்கை எடுத்த திரு. N .S . அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !

இதுபோல LSG  பதவிகள் நிரப்பப்படுவதிலும் DTE CLEARANCE  பெற்று விரைவில்  பதவி உயர்வு அளிக்கப் படும் என்று  உறுதி அளிக்கப் பட்டிருக்கிறது. நீதி மன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் இது இந்த மாததிற்குள் நடக்கும் என்று  உறுதியாக நம்புகிறோம். தோழர்களின் கோரிக்கைகளை ஏற்று உடன் செயல் பட்ட மாநில சங்க மாநில  செயலராகிய தோழர் J Ramamurthy அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் 







No comments:

Post a Comment