Wednesday, November 19, 2014

சிவில் சர்வீஸ் தேர்வர்களின் உச்ச வயது வரம்பு குறைப்பு?





மாற்றம் செய்த நாள்

19நவ
2014 
00:53

பதிவு செய்த நாள்
நவ 18,2014 23:38
புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின் படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள், 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 29 ஆகவும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஒருவர் எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம் என்பதிலும் மாற்றம் கொண்வரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, பொதுப் பிரிவினர், மூன்று முறையும், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள், ஐந்து முறையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், ஆறு முறையும் மட்டுமே எழுத முடியும். இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம்.
Sourced By : Dhinamalar

No comments:

Post a Comment