12 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
Advertisement
மாற்றம் செய்த நாள்
29நவ2014
23:51
பதிவு செய்த நாள்
நவ 29,2014 23:38
நவ 29,2014 23:38
கவுகாத்தி : 'வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில், மென்டிபதர் - கவுகாத்தி இடையேயான பயணிகள் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நாடு சுதந்திரமடைந்து, 60 ஆண்டுகளுக்கு பின், மேகாலயா மாநிலத்திற்கு துவக்கப்படும் முதல் ரயில் சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில், கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில், அத்தகைய வசதிகளை உருவாக்கி தர வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.நம் நாட்டின் ரயில் நிலையங்கள், 100 ஆண்டுகளுக்கு முன் எத்தகைய வசதிகளை கொண்டிருந்ததோ, அதேபோல் தான் தற்போதும் உள்ளன.அந்நிலையை மாற்றி, நவீன வசதிகளை ஏற்படுத்தி தர, ரயில் நிலையங்கள் தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, நாடு தழுவிய அளவில், 10 முதல், 12 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். இதனால், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களைக் காட்டிலும் சிறப்பான வசதியை பெற முடியும்.
நாட்டின் நான்கு மூலைகளிலும், நான்கு ரயில் பல்கலைக்கழகங்களை திறக்க, அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த, 100 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார்.

No comments:
Post a Comment