POST OFFICE IMPROVING BUSINESS WITHIN THEIR OWN EMPLOYEES !.
'சொந்தக் காசில் சூனியம்' வைக்கலாமா ?
அஞ்சல் துறையின் வியாபார யுக்தி அபாரம் !
வணிகப் பெருக்கம் அமோகம் !
இனி எந்த ஒரு ஊழியரும் ஊதியமே வாங்க வேண்டாம் !
மாதம் 100 RD கணக்குகள் அவரவர் பெயரிலேயே துவக்குங்கள் !
ஆனால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டாம் !
PASS BOOK போட வேண்டாம் !
( சும்மா கணக்கு எண்ணிக்கைக்குத் தானே !)
கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள் வணிகப் பெருக்கம் என்ற
பெயரில் கணக்குக் காட்ட 'பினாமி' யாக RPLI POLICY உங்கள் பணத்திலேயே போடுங்கள் !
மாதா மாதம் PREMIUM கட்ட வேண்டாம் !
ஆனால் மாதா மாதம் புதிது புதாதாக 'பினாமி ' பாலிசி போடுங்கள் !
பாலிசி எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டாமா !
கீழ் மட்ட அதிகாரிகள் உயர் மட்ட அதிகாரிகளிடம் AWARD வாங்க வேண்டாமா !
70% பாலிசி க்கள் இறந்து போனாலென்ன ?
ஒவ்வொரு பாலிசி க்கும் இலாகாவுக்கு ரூ. 420/- செலவு ஆகிறதாம் !
ஆனால் நீங்கள் ரூ.15.00 க்கு WHOLE LIFE POLICY ஆக மாதம்
100 பாலிசி போடுங்கள் ! வியாபார அபிவிருத்தி தானே !
ஒட்டு மொத்தத்தில் ரூ.15.00 வரவு ரூ. 420.00 செலவு .
இது இலாக்கா ஆண்டு இறுதியில் கணக்கு எடுக்குமபோதுதானே
தெரிய வரும் !
அது பற்றி நமக்கென்ன கவலை !
இருக்கவே இருக்கு இலாக்கா நட்டத்தில் இயங்குகிறது !
எல்லாரும் BELT ஐ இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்ற கோஷம் !
உங்களுக்கு நீங்களே 'MY STAMP' போட்டுக் கொள்ளுங்கள் ! வீட்டில் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளிடம் காட்டி பெருமை அடையுங்கள் !
வியாபாரம் அபிவிருத்தி அடைய வேண்டாமா ?
நீங்களே PHILATELY DEPOSIT ACCOUNT உங்கள் பெயரிலேயே ஆரம்பித்துக் கொள்ளுங்கள் ! நீங்களே வாங்கிய
STAMP ஐ கவுன்டரில் விற்றுக் கொள்ளுங்கள் !
வியாபார அபிவிருத்திதானே ? அமோகமாக இலாக்காவுக்கு லாபமில்லையா ?
IMO பெருக
வேண்டுமா ? உங்களுக்கு நீங்களே MONEY ORDER BOOK செய்யுங்கள் ! உடனடி
பட்டுவாடா என்று RECORD செய்யுங்கள் ! பத்திரிக்கைகளுக்கு பேட்டி
கொடுங்கள் !
எல்லாம் வியாபார அபிவிருத்தி அல்லவா ?
EPOST 'புடியுங்கள்' ! அல்லது உங்களுக்கு நீங்களே செலவு
செய்து EPOST அனுப்பி அகமகிழ்ந்து கொள்ளுங்கள் !
உங்கள் ஊதியப்
பணத்தை குடும்பத்திற்கு ஏன் விரயம் செய்கிறீர்கள் ? இலாக்காவுக்கு லாபம்
ஈட்ட இப்படியான உக்திகளை கையாளுங்கள் ! நிச்சயம் லாபம் தான் ! முடிந்தால்
தனியார் AGENCY முறை மூலம் பெறும் பொருட்களை நீங்களே வாங்கிக்
கொள்ளுங்கள் !
இப்படி தீவிரமாக BUSINESS செய்துகொண்டிருக்கும் போது ,
பசி எடுத்தால் நீங்கள் வெளியே சென்று சாப்பிடாதீர்கள் !
உங்களுக்குள் நீங்களே ஒருவரை ஒருவர் கடித்து பசியாறுங்கள் ! அல்லது பசி எடுத்தால் தன் சதையையே தானே
கடித்து பசியாறுங்கள் ! பசி தீர்ந்து விடும் !
இலாகாவின் வணிகப் பசி இப்படித்தானே தன் ஊழியரையே
தான் கடித்து தன் பசி ஆறுகிறது ?
இவையெல்லாம் வணிக வளர்ச்சி கூட்டங்களில் மேலதிகாரிகள் கீழதிகாரிகளுக்கு அளித்திடும் INNOVATIVE BUSINESS
DEVELOPMENT உக்திகளாகும்.
இல்லையென்றால்
, நாங்கள் மேல சொன்னவற்றையெல்லாம் கீழ் அதிகாரிகள் சுற்றறிக்கையாக , கிளை /
துணை அஞ்சலகங்களுக்கு அனுப்புவார்களா ? அப்படி அனுப்பினார்கள் என்றால் ,
நிச்சயம் இவை மேலதிகாரிகள் அளித்த ஆலோசனைகள் தானே ?
வாழ்க அஞ்சல் துறை ! வளர்க வணிகப் பெருக்கம் !
இனி RECRUITMENT NOTIFICATION போடும்போது:
'சொந்தக் காசில் வணிகம் செய்து வியாபார அபிவிருத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் '
என்று NOTIFICATION செய்தால் நன்றாக இருக்கும் !.
அல்லது 'சொந்தக் காசில் சூனியம்' வைத்துக் கொள்ள
விருப்பமிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும் என்று அறிவிக்கை செய்திடவும் ! இலாக்கா இப்படியே போனால் நன்றாக வளரும் !
அதில் ஊதியம் பெறும் நாமும் வளர்ச்சியடைவோம் !
மேலே கண்ட விபரங்கள் எங்களால் ஏனோ தானோ என்று வேண்டா வெறுப்பில் சொல்லப் படவில்லை ! கண்டதைத்தான் சொல்லுகிறோம் !
கீழே பார்க்க ஒரு உதாரணம் !
இது போல பல கோட்டங்களில் நடக்கிறது !
இதில் அதிகமாக திருச்சி மற்றும் மதுரை மண்டலங்களில் இருந்துதான் நிறைய புகார்கள்
உண்மையான அக்கறை உள்ள மேல் அதிகாரிகள்
நிச்சயம் இருக்கிறார்கள் !
அவர்கள் பார்வைக்கு இந்த வலைத்தளம் மூலம் இது சென்றால் , அவர்களும் உடன் இதன் மீது நடவடிக்கை எடுத்தால் ,
REAL BUSINESS என்பதை நோக்கி நாம் சென்றால் ,
நிச்சயம் இலாகா வளர்ச்சி பெறும் !
அந்த திசை நோக்கி நாம் சிந்தித்தால் அது நமக்கும் ,
இலாக்காவுக்கும் நிச்சயம் நல்லது!
விமரிசனம் செய்வது மட்டும் நம் நோக்கமாக இருக்க முடியாது !
இலாக்காவில்
ஊதியம் பெறும் ஊழியர் என்ற வகையில் 'நமக்கு சோறிடும் கோவிலை இடிக்காதீர் '
என்று இடித்துரைக்கவும், உண்மையான வணிகம் புரிந்திடுங்கள் !என்று வழி
காட்டவும்
நமக்கு கடமை இருக்கிறது !
மேலதிகாரிகள் தலையிடுவார்களா ? பார்ப்போம் !
No comments:
Post a Comment