Wednesday, November 30, 2016

டாக்சி டிரைவர் வங்கி கணக்கில்
ரூ.9,800 கோடி 'டிபாசிட்'
பர்னாலா: தினசரி, 200 ரூபாய் சம்பாதிக்கும் டாக்சி டிரைவரின், 'ஜன்தன்' கணக்கில், 9,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

பஞ்சாப் மாநிலத்தில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.சங்ரூர் மாவட்டம், பர்னாலா, எஸ்.டி.கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் இருந்து, நகரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு, தினமும் பணத்தை எடுத்துச் செல்லும் பணியில், பல்வீந்தர் சிங் என்னும் டாக்சி டிரைவர் ஈடுபட்டார். 
9,800 கோடி ரூபாய்

குறுஞ்செய்தி : இதற்காக இவருக்கு, தினமும், 200 ரூபாய் வழங்கப்பட்டது; அந்தப் பணம், அதே
வங்கிக் கிளையில் உள்ள, பல்வீந்தர் சிங்கின் ஜன்தன் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அவரது கணக்கில், 9,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால், ஆனந்த அதிர்ச்சியடைந்த பல்வீந்தர்சிங், வங்கி மேலாளரிடம் கேட்ட போது, பல்வீந்தரின் வங்கிக் கணக்கு புத்தகத்தை வாங்கினார். சில நாட்களுக்கு பின், திருத்தப்பட்ட புதிய கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
அதிகாரிகள் குழு விசாரணை

கடந்த, 19ல், மீண்டும் இவரது கணக்கில், 1,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. வங்கி மேலாளரிடம் இது குறித்து கேட்ட போது, பதிலளிக்காமல் தவிர்த்ததுடன், அவரை பணியில் இருந்தும் நீக்கினார். இது குறித்து, பாட்டியாலாவில் உள்ள, வருமான வரித்துறை அலுவலக அதிகாரி களிடம், பல்வீந்தர் புகார் அளித்தார். வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஹர்ஜிந்தர் சிங் தலைமையிலான அதிகாரிகள்குழு, பர்னாலாவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவுக்கு சென்று, வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினர்.
1,000 கோடி வரவு



வருமான வரித்துறை அதற்கு, 'பல்வீந்தரின்
Advertisement
கணக்கில், 200 ரூபாயை டிபாசிட் செய்வதற்கு பதில், துணை மேலாளர் தவறுதலாக, வங்கியின் பொது கணக்கு லெட்ஜரின் எண்ணை பதிவு செய்துவிட்டார். பின், அந்த தவறு சரி செய்யப்பட்டது; இந்த தகவலை, பல்வீந்தரிடம் கூறவில்லை' என, வங்கி மேலாளர் கூறினார். ஒரு முறை தவறு ஏற்பட்டதை ஏற்றாலும், 19ல், மீண்டும் 1,000 கோடி வரவு வைக்கப்பட்டது எப்படி என, வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதற்கு, 'வேறு கிளையில் இருந்து, வரவு வைக்கப்பட்டு உள்ளது' என, வங்கி மேலாளர் கூறினார். இதையடுத்து, பர்னாலா, எஸ்.டி.கல்லுாரி வளாக கிளை மற்றும் டி.சி.வளாக கிளையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த கிளைகளில் உள்ள கணினிகள் சீலிடப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment