Monday, November 28, 2016



ரொக்கமில்லாமல் அரசின் சேவைகள் 'ஆப்'
அறிமுகம் செய்கிறது ஆந்திரா
'ரொக்கப் பயன்பாட்டை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் சேவைகள் அனைத்தையும் மின்னணு பரிவர்த் தனை மூலம் மேற்கொள்ள, புதிய மொபைல், 'ஆப்'பை அறிமுகம் செய்கிறது ஆந்திர அரசு.
கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், செல்லாத ரூபாய் நோட்டு குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 
பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ரொக்கமில்லா சமூகத்தைஉருவாக்கும் வகையி லான இந்த திட்டத்துக்கு, ஆந்திர அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. தொழில்நுட் பிரியரான, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரு மான சந்திரபாபு நாயுடு, இதற்காக நிபுணர் குழுவை அமைத்துள்ளார்.

அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள், வரிகள் உள்ளிட்டவற்றை, மின்னணு பரிவர்த்தனை மூலம்செய்வதற்கான மொபைல் ஆப் வடிவமைக் கப்பட்டுள்ளது.'ஏ.பி., பர்ஸ்' என்று பெயரிடபட்டுள்ள, இந்த ஆப்பில் முதல்கட்டமாக, 13 அரசுசேவைகளுக் கான கட்டணங்களை மின்னணு வடிவில் செலுத்த முடியும்.

ஆன்லைன் மூலமாகவும் இந்த ஆப்பை பயன் படுத்த 


முடியும். தெலுங்கு மொழியில் உள்ள இந்த ஆப், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள் ளது.ரொக்கமில்லா பரிவர்த்தனைக்காக பல் வேறு ஆலோசனைகள் வழங்க, நான்கு நிபுணர் குழுவையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment