Saturday, July 16, 2016

தங்க சேமிப்பு பத்திரம் 18ம் தேதி வெளியீடு

புதுடில்லி : மத்திய அரசு, நான்காவது தவணையாக, வரும் 18ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிடுகிறது.


நடப்பு நிதியாண்டில், முதன் முதலாக மேற்கொள்ளப்படும் இவ்வெளியீட்டில், குறைந்தபட்ச முதலீடு, 2 கிராமில் இருந்து, 1 கிராம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர், அதிகபட்சமாக, 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி அடிப்படையில், அரையாண்டிற்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட, தங்க பத்திரங்களில், 5, 6 மற்றும் 7 ஆண்டுகளில், வெளியேறும் வசதியும் உள்ளது.

அனைத்து வங்கி கிளைகள், குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களிலும், தங்க சேமிப்பு பத்திரங்களில், வரும் 22ம் தேதி வரை முதலீடு செய்யலாம். கடந்த மூன்று தவணைகளில் வெளியிடப்பட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம், மத்திய அரசு, 1,320 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. 4.50 லட்சம் பேர், 4,908 கிலோ தங்கத்தை, பத்திரங்கள் வடிவில் வாங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment