COPY OF EMAIL SENT TO SECRETARY GENERAL NFPE/GENERAL SECRETARY, AIPEU GR. C CHQ BY OUR CIRCLE UNION
அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் வணக்கம் !
தற்போது இலாக்கா மூலம் இன்று இரவு 10.00 மணி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் சேமிப்பு வங்கிப் பகுதிகளில் DEPOSIT வாங்கப் படவேண்டும் என்ற உத்திரவு வெளியிடப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
இது மிகவும் தவறானது என்றும் இதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தெரிவித்து உடன் இதில் தலையிட்டு இலாக்கவிடம் பேசுமாறு நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் மற்றும் சம்மேளனத்தின் மாபொதுச் செயலருக்கு நம்முடைய மாநிலச் சங்கம் EMAIL மூலம் SAVINGRAM வடிவிலான கடிதம் அனுப்பியுள்ளது..
மேலும் உடனடியாக நம்முடைய பொதுச் செயலரிடம் தொலை பேசியில் பேசினோம். நம்முடைய மாநிலச் சங்கத்தின் கருத்தைப் பதிவு செய்தோம். தற்போது நம்முடைய பொதுச் செயலரும் துணைப் பொதுச் செயலரும் இலாக்கா முதல்வரை சந்திப்பதாகவும் மாலைக்குள் இதற்கு விடை காணப்படும் என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார். அவருடைய பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம். இந்தத் தகவலை அனைத்து ஊழியர்களிடமும் தெரிவிக்கவும். நாம் அனுப்பிய SAVINGRAM நகல் கீழே பார்க்கவும்.
No comments:
Post a Comment