Wednesday, January 13, 2016

National Council (Staff Side) (JCM) addressed to the Secretary Department of Expenditure, Government of India on issuing orders for raise in bonus ceiling

போனஸ் உச்ச வரம்பு உயர்த்தி வழங்கிட, அதுவும் 01.04.2014 முதல் வழங்கிட உரிய சட்ட திருத்த மசோதா  பாராளுமன்றம், ராஜ்ய சபை என்ற இரு அவைகளிலும்  நிறைவேறிய  போதிலும் உரிய  கெசெட்  அறிவிக்கை வெளியிட்டபோதும் இன்னமும்  நிதியமைச்சகம் மூலம் அரசின் உத்திரவு வெளி வரவில்லை . எனவே  உடன் அரசின் உத்திரவு வெளியிட வேண்டி தேசிய கூட்டு  ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பின் செயலர் கடிதம் அளித்துள்ளார். அதன் நகல் கீழே  காண்க :-

NEXT RJCM MEETING PROPOSED ON 27.01.2016 - BI MONTHLY MEETING WITH PMG, CCR NOTIFIED ON 22.01.2016


அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! அடுத்த RJCM  கூட்டம்  எதிர்வரும் 27.01.2016 அன்று நடத்தப்பட  CPMG , TN  அவர்களால் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப் படவில்லை. 

எனினும் கோட்ட/ கிளைச் செயலர்கள் , மாநில அளவில் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினைகள் இருப்பின்  உடன்  மாநிலச் சங்க ஈமெயில் முகவரிக்கு உரிய விபரங்களுடன் அனுப்பிட வேண்டுகிறோம். ஏற்கனவே எடுக்கப் பட்ட பிரச்சினைகளை மீண்டும் தெரிவிக்க வேண்டாம். அவை இன்னமும் தீர்வாகாத பிரச்சினைகளாக எடுத்துச் செல்லுகிறோம். 

கோட்ட அளவில் எடுக்கப்பட்டு ,  பின்னர் மண்டல அளவில் எடுக்கப் பட்டும்  தீர்வாகாத  பிரச்சினைகளை தெரிவிக்க  வேண்டுகிறோம். தனி நபர் பிரச்சினைகள்  RJCM  இல் எடுக்க முடியாது . அவற்றை உரிய முறையீடுகள் மூலமே  எடுக்க முடியும். இதனை நினைவில் கொண்டு உடனே  செயல்பட வேண்டுகிறோம். RJCM பிரச்சினைகள்  என்று குறிப்பிட்டு எதிர்வரும் 17.01.2016 க்குள் கிடைக்குமாறு  ஈமெயில் அனுப்பிட  வேண்டுகிறோம்.

சென்னை பெருநகர  மண்டல PMG உடனான  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 22.01.2016 அன்று நடைபெற உள்ளது. எனவே சென்னை பெருநகர மண்டலத்தை சேர்ந்த கோட்ட/கிளைச் செயலர்கள்  தங்கள்  பகுதியில்  கோட்ட மட்டத்தில் எடுக்கப்பட்டும்   தீர்வாகாத பிரச்சினைகள் இருப்பின்  உடன் அதனை  மாநிலச் சங்கத்திற்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கவும்.  

தோழமையுடன் ,
J . இராமமூர்த்தி ,
RJCM  ஊழியர் தரப்பு செயலர்  மற்றும் 
தமிழ் மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று.



REVISION OF RATES TO SWEEPER/ WATER CARRIERS/GARDENERS ETC. FOR THE FINANCIAL YEAR 2015-16



NJCA CALL - DAY LONG DHARNA ON 20.01.2016 AT ANNA ROAD HPO PREMISES FOR PAY COMMISSION DEMANDS


FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES 
ON 20.01.2016

ஆவது ஊதியக் குழுவின் பாரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாற்றம் வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும்

முழு  நாள்  தார்ணா 
நாள் : 20.01.2016             நேரம் : காலை 10.00 மணி
இடம் : அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகம் 
சென்னை 600 002.

நம்முடைய  அஞ்சல் மூன்று,   அஞ்சல்  நான்கு, RMS  மூன்று,  RMS  நான்குகணக்குப் பிரிவுநிர்வாகப் பிரிவு, SBCO சங்கம்  உள்ளிட்ட  உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகள், மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகள், கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரும்  தங்கள் பகுதி  ஊழியர்களை ஒன்று திரட்டி, முழு நேர விடுப்பெடுத்து மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு நம்முடைய ஒற்றுமையின்  வலிமையை அரசுக்கு  தெரிவிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும்  கண்டிப்பாக  விடுப்பெடுத்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்டலச் செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு செயலாற்றிட வேண்டு கிறோம்.

போராட்ட  வீச்சு பெருகட்டும் ! 
போராட்டம் வலிமை பெறட்டும்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

NJCA, CONFEDERATION, NFPE UNIONS
TAMILNADU CIRCLE

No comments:

Post a Comment