Friday, June 13, 2014

ஐ.ஏ.எஸ்., தேர்வில் 45 வது இடம்: தமிழில் எழுதி சாதித்தார் தேனி இளைஞர்.
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஜூன்
2014
00:49
பதிவு செய்த நாள்
ஜூன் 13,2014 00:31
தேனி: தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார் தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், 26. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. இதில், தேவதானப்பட்டி ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தேசிய அளவில் 45 வது 'ரேங்க்' பெற்றார்; தமிழக அளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றார். இவர் தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர். இவரது தந்தை பழனிச்சாமி, கெங்குவார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்; தாயார் பாண்டியம்மாள்; இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.


ஜெயசீலன் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு வரை, ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளியிலும் படித்தேன். மதுரை விவசாயக் கல்லூரியில் இளங்கலை விவசாயம் படித்தேன். தமிழ் மேல் இருந்த ஆர்வத்தால், தொலைநிலைக் கல்வியில் முதுகலை தமிழ் படித்தேன். அதன்பின் தமிழில் ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) தயார் செய்து வருகிறேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் தயார் செய்தேன். கடந்த 2012ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி 600 வது 'ரேங்க்' பெற்றேன். இதில் ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவின்யூ சர்வீஸ்) கிடைத்து நாக்பூரில் பயிற்சியில் உள்ளேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி, தற்போது 45 வது 'ரேங்க்' பெற்றது மகிழ்ச்சி. தமிழ் இலக்கியப் பாடம் எடுத்து, தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றது மறக்க முடியாதது. டாக்டர் அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., கால்நடைத்துறை விஞ்ஞானி சங்கர் சரவணன், டில்லியில் உள்ள பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., (1986ல் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்) ஆகியோர் எனது வெற்றிக்கு உறுதுணை
Source By: Dhina Malar

No comments:

Post a Comment