Saturday, June 14, 2014

மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களில் மொபைல், பேனா கொண்டு செல்ல தடை.
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2014
08:44
புதுடில்லி : 'மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது', இந்த வாசகம் பொறிக்கப்பட்ட போர்டுகளே பெரும்பாலான மத்திய அமைச்சர்களின் அலுவலக வாசலில் தற்போது காட்சி அளிக்கிறது. மொபைல் போன் மட்டுமின்றி பேனாக்கள் கொண்டு செல்லவும் சில அமைச்சர்கள் தடை விதித்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு வருபவர்கள் மொபைல் போன், பேனா கொண்டு வர தடை விதித்துள்ளனர். அதனை பாதுகாப்பாக வெளியே வைத்து விட்டு வரவும் ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய வேளாண்துறை அமைச்சர் சஞ்சீவ் பால்யானின் அலுவலகத்திற்கு வருபவர்கள் பேனாக்களை கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஒட்டுகேட்கும் வகையிலான அதிநவீன திறன் கொண்ட பேனாக்கள் தற்போது வெகு சாதாரணமாக கிடைக்கின்றன; இதனை கருத்தில் கொண்டு, அமைச்சக தகவல்கள் வெளியே கசியாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தடையை மீறி படம் எடுக்க முயற்சி:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனில், அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறைக்கு முந்தைய அறையில் பார்வையாளர்களின் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை வைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தடை விதிக்கப்பட்டிருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன், போட்டோகிராபர் ஒருவர் அலுவலகத்தில் இருந்த இரானியை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார். பாதுகாப்பு அலுவலர்கள் அதனை தடுத்துள்ளனர். இதனைக் கண்ட இரானி, தடையை மீறி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என அந்த போட்டோகிராபரிடம் கோபித்துக் கொண்டுள்ளார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா, அவரது அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே வருவதற்கு முன் மொபைல் போனை ஆப் செய்து வைக்க வேண்டும் அல்லது சைலன்ட் மோடில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதேசமயம் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இத்தகைய கட்டுப்பாடுகள் எதையும் இதுவரை விதிக்கவில்லை. இருப்பினும், அவரது இணையமைச்சர் மனோஜ் சின்கா, மொபைல்களை ஸ்விட் ஆப் செய்து விடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
தனது அலுவலகத்திற்கு வருபவர்கள் முதலில் தங்களின் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட வேண்டும் என்ற தடையை முதலில் கொண்டு வந்தவர் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா. அவரை தொடர்ந்து தற்போது மத்திய அமைச்சர்கள் பலரும் இத்தகைய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க துவங்கி உள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Source By : Dhinamalar

No comments:

Post a Comment