Thursday, June 19, 2014

பெண்களை பாதுகாக்கும் நிர்பயா திட்டத்தை விரைவுபடுத்த ராஜ்நாத் தீவிரம்

 Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2014
05:05
புதுடில்லி:பெண்களுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்பு அளிப்பதற்கு உதவும் நிர்பயா திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று நடந்த கூட்டத்தில் கேட்டுகொண்டார்.டில்லியில் நிர்பயா கற்பழிப்பு சம்பவத்திற்கு பின் குறிப்பாக நகரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக அவற்றை தடுக்க பெண்களி்ன் பாதுகாப்புக்கு உதவும் நிர்பயா திட்டத்தை தீவிரமாக்க ராஜ்நாத்சிங் முயற்சி எடுத்துவருகிறார்.
இந்தத் திட்டத்தின்படி ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்களது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடைந்து , அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உதவுவதே நிர்பயா திட்டம் ஆகும்.இத்திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள 114 நகரங்கள் கணடறியப்பட்டன.ஆனால் செயல்பாடு இல்லாத நிலை கவலையளிப்பதாக இருப்பதை கண்டு உள்துறை அமைச்சகம் நேற்று கூட்டத்கைத கூட்டியது.இதில் கலந்து கொண்டு பேசியபோது, நிர்பயா திட்டம் விரைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அறிக்கை வெளியிட்டார் ராஜ்நாத்சிங்.
சைபர் கிரைம் திட்டம் தொடர்பாக பேசிய போது,கடந்த 2012ல் 3,477 குற்றங்கள் பதிவாகி இருந்தன.தற்போது இந்தியாவில் 916 மில்லியன் போன் வசதியும் 239 மில்லியன் பேர் இன்டர்நெட் பயன்பாடு இருக்கிறது. இந்நிலையில் அந்த வசதியை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க போதுமான ஆலோசனைகளை அதிகரித்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய நிர்பயா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.தற்போது அதனை விரைவாக செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிரம் காட்டி வருகிறார்.
Source By: Dhinamalar
Click Here

No comments:

Post a Comment