Friday, April 4, 2014

சிலியை உலுக்கும் நிலநடுக்கம்; மீண்டும் 6.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது

Subscribe to Syndicate
Share/Save
-A +A
சாண்டியாகோ,
தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு இந்திய நேரப்படி அதிகாலை 5.16 மணி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவானது.  பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானார்கள். அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சிலி நாட்டின் வடக்குப்பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவு ஆனது. உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கின. கட்டிடங்களை விட்டு வெளியேறி மக்கள் வீதிகளுக்கு வந்தனர். அதிபர் மிச்செல்லி, தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி அளவில் மீண்டும்  6.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 4.7, 4.9 , 5.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Source; Daily thanthi.

No comments:

Post a Comment