Sunday, January 12, 2014

அனைத்துத் தடைகளையும் உடைத்து எறிந்து வெற்றி பெற்ற போராட்டம்.மதுரை மண்டல அலுவலக வளாகத்தில் தொடர் முழக்க ஆர்பாட்டம்.

Displaying News.jpg5.1.14 அன்று மதுரை மண்டல கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் அடிப்படையில், தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைப் பட்டியிலிட்டு, அதனை வழங்கும் போது, தொடர் முழக்கப் போராட்டம் 10.1.14 அன்று வெற்றிகரமாக நடத்தப் பட்டது. காலை 9 மணிக்குள்ளாகவே, அனைத்து R.O.இல் பணி புரியும் ஊழியர்களையும் வர ஆணையிட்டும், 9 மணிக்கு அலுவலக வெளிக் கதவை பூட்டு போட்டு பூட்டியும், பெரிய அளவில் போலீஸ் படையை வரவழைத்தும் நிர்வாகம் பல தடைகளைப் போட்டது.  சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நடக்காது என தப்புக் கணக்குப் போட்டது.
தடைகளை மீறி உள்ளே போர்ப் பரணி இசைத்திட நமது படை நுழைந்தது. காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி நமது தலைவர்கள் வளாகதினுள்ளே போராட்டம் செய்திட வியூகம் அமைத்தனர். அலுவலக உள் கதவை மூடுதல், கையிலே BMM கூட்டத்த்திற்கு வரும் பட்டியலை MTS முதல் APMG வரை கையில் வைத்துக் கொண்டு, CHECK-OFF செய்தல், இந்திய-பாகிஸ்தான் எல்லை வாகா பார்டர் போல கெடுபிடி அமலாக்கல், காவல் துறை அதிகாரிகள் மூலமாக நமக்கு செய்தி பரிமாற்றம் செய்தல், தீவிர வாதக் கும்பலை எதிர் கொள்ளும் அளவிலே முஸ்தீபுகள் என நிர்வாகம் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இல்லை.  

ஆயினும், காவல் துறை அதிகாரிகள் மூலமே பூட்டிய வெளிக் கதவைத் திறக்கச் செய்தோம்.  வாகா பார்டர் திறக்கப் பட்டதும், மூடியிருந்த உள் கதவை அதே காவல் துறை மூலம் PMG அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து, அனுமதி மறுக்கப் பட்டாலும் தார்னா நடத்தப் படும் என PMG-இடம் அறிவித்து விட்டு, வெற்றி முழக்கங்களுடன் இயக்கம் துவங்கியது. 500 தோழர்கள் திரண்டிருக்க, NFPE-COC அறைகூவல் படி விண்ணத்திரும் முழக்கங்கள் வளாகத்தை குலுங்கச் செய்ய, தோழர் ஜெ. ஸ்ரீவெங்கடேஷ், மாநிலத் தலைவர் தலைமையில் தோழர் JR துவக்கி வைக்க, மாநிலச் செயலர்கள், K. ராஜேந்திரன் [R4], K.சங்கரன் [R3] அப்பன்ராஜ் [SBCO] K. பத்மநாபன் [DYCS P4], தனராஜ் [GDS] ஆகியோர் சிறப்புரை ஆற்ற கோலாகலமாக இயக்கம் பீடு நடை போட்டது.  மாநிலத் தலைவர்கள் G. கண்ணன் [P4], S. ராம ராஜன் [GDS][மண்டல செயலர்கள் தியாக ராஜா பாண்டியன் [P3], செல்வராஜ் [R4] பாலா முருகன் [R3] ராஜசேகர் [GDS]  கேசவன் [SBCO] ஆகியோரும் மாநில சங்க நிர்வாகிகள் ஜேகப் ராஜ் [P3] பாண்டி தொரைராஜ் [R3] ஆகியோர் உரை வீச்சு நிகழ்த்தினர். 

மதியம் 2.30 மணிக்கு BMM கூட்டத்தில் நாம் தயாரித்திருந்த கோரிக்கை மனுவில் கையெழுத்து இட்டிருந்த மாநிலச் செயலர்கள் உள்ளிட்டு 16 தோழர்கள் கலந்து கொண்டோம். நுழை வாயிலிலேயே மீண்டும் கையெழுத்துப் போடச் சொல்லி கெடுபிடி.  அதனை மருத்து அனைத்து தோழர்களும் கான்பரன்ஸ் அறையிலே முகாம் இட்டோம்.  மகஜர் மீது பேச்சு வார்த்தை இல்லை எனச் சொல்லிய PMG அவர்களுடன் கறாராக வாதாடி BMM கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்வதாக எழுத்து பூர்வமாக கொடுத்து மகஜர் மீதான விவாதம் 21=-ம் தேதி நடத்திட நிர்ணயம் செய்து விட்டு வெளி நடப்பு செய்தோம். 

உள்ளே நுழையத் தடை உடைக்கப் பட்டது.  கூட்டம் போடத் தடை மீறப் பட்டது.  கெடுபிடிகளும், அதிகார அத்து மீறல்களும், ஆணவ செயல்பாடுகளும் தவிடு பொடியாகின.  இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்ற முழக்கம் மீண்டும் நிரூபிக்கப் பட்டது.  பொங்கல் தினத்தன்று ஸ்பீட் பட்டுவாடா இல்லை, மேலூர் சௌத் அஞ்சலகம் மீண்டும் திறக்கப் படும், தூத்துக் குடி தோழியர் துர்கா தேவி இடமற்ற உத்தரவு கைவிடல் ஆகியவை இறுதி செய்யப்பட்டன.  மகிழ்ச்சியில் திரண்டிருந்த ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

ஆணவத்தின் உச்சம் சென்று ஆட்டம் போட்ட எவருமே வென்றதாக வரலாறில்லை என்ற வெற்றிக் கதையை மீண்டும் எழுதிய NFPE-COC க்கும் உணர்வுடன் ஊழியரைத் திரட்டிய கோட்டா/கிளை செயலர்களுக்கும் பெருமளவில் திரண்டு போராடிய தோழர்களுக்கும் வெற்றியினை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment