Tuesday, December 3, 2013


DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING AND TRADE UNION STUDY CAMP OF CHENNAI CITY REGION

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். !  

சென்னை பெருநகர மண்டல தொழிற்சங்க பயிலரங்கு !

குடந்தை மாநில மாநாட்டு தீர்மானத்தில் அடிப்படையில் கடந்த 5 மாதங்களுக்குள்  இதுவரை  தெற்கு ,மேற்கு  மற்றும் மத்திய மண்டலத்தில்  , கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டமும் ,  தொழிற் சங்க பயிலரங்கு நிகழ்ச்சியும்  இரண்டு  நாள்  நிகழ்வாக நடத்தி முடித்துள்ளோம். 

இதில்  தென் மண்டலத்தில்  30 பக்கங்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப் பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதாக  மண்டல நிர்வாகத்திடமிருந்து பதிலும் பெற்று , தென் மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு அளித்துள்ளோம். 

பதில் அளிக்கப் பட்டதில்,  பிரச்சினை சரியாக தீர்வாகாத/ அல்லது சரியாக நிர்வாகத்தால் கையாளப் படாத  பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்வரும் 05.12.2013 அன்று நமது தென் மண்டலச் செயலரும் , தென் மண்டலத்தில் உள்ள நமது  மாநில உதவிச் செயலரும் , மண்டல அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர். அந்தப் பேச்சு வார்த்தையின் முடிவு தெரிந்தவுடன் , பிரச்சினைகள் சரியாக தீர்வாகவில்லை எனில்  போராட்ட அறிவிப்பு குறித்து முடிவு செய்யப் படும்.

இதே போல  மேற்கு மண்டலத்திலும்  ஊழியர்களின் பிரச்சினை  ஒன்று படுத்தப் பட்டு  கோரிக்கை மனுவாக மண்டல அதிகாரியிடம்  கடந்த 26.11.2013 அன்று அளிக்கப்பட்டு அதன் நகலும்  மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும்  அனுப்பப் பட்டுள்ளது.  பிரச்சினை தீர்வாகவில்லை எனில் போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப் படும்.

இதேபோல  மத்திய மண்டலத்திலும்  கோரிக்கை மனு தயார் செய்யப் பட்டுள்ளது . அது விரைவில்  மண்டல அதிகாரியிடம் வழங்கப் படும்.

தற்போது  மீதமுள்ள  சென்னை பெருநகர மண்டலத்தில்  , நமது தீர்மானத்தின் அடிப்படையில் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் , தொழிற்சங்க பயிலரங்கு நிகழ்ச்சியும் நடத்திட தீர்மானித்துள்ளோம். 

சென்னை பெருநகர மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 28.12.2013 சனியன்றும்  தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 29.12.2013 ஞாயிறன்றும் சென்னை  தாம்பரம்  நகரில் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது.  

தாம்பரம் அஞ்சல் மூன்று  கோட்டச் செயலர் தோழர். B . செல்வகுமார் அவர்கள் தங்கள் கோட்டச் சங்கத்தின் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்திட அன்புடன் முன்வந்துள்ளார்கள் . கோட்டச் செயலர், கோட்டத் தலைவர், நிதிச் செயலர் உள்ளிட்ட கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கு நமது  முன்னோட்டமான நன்றியினை மாநிலச் சங்கத்தின் சார்பாக நாம் தெரிவித்துக் கொள்கிறோம்;.

இதற்கான இடம்  மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட  அறிவிப்பு  பின்னர் வெளியிடப்படும். சுற்றறிக்கையும்  தனியே வெளியிடப்படும். தோழர்கள்/ தோழியர்கள் கலந்துகொள்ள ஏதுவாக முன் கூட்டியே இந்த அறிவிப்பு வெளியிடப் படுகிறது. இந்த அறிவிப்பை பார்க்கும் தோழர்கள், மற்றைய அனைவருக்கும் இதனை தெரிவிக்கவும்.  இந்த தேதியில் வேறு எந்த  வேலைகளுக்கும் நீங்கள் சென்று விடாமல் , இதில் முழுமையாக கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே  உங்களுக்கு முன்கூட்டிய அறிவிப்பு வெளியிடப் படுகிறது. 

தோழமை வாழ்த்துக்களுடன் 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம். 

No comments:

Post a Comment