News From Circle Union Tamil Nadu Circle.
LSG PROMOTIONS ON THE MOVE AGAIN BASED ON DATE OF CONFIRMATION IN TAMIL NADU CIRCLE
நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த LSG
பதவி உயர்வு என்பது தமிழ்நாடு வட்டத்தில் தற்போது அளிக்கப் பட முயற்சிகள்
எடுக்கப் பட்டுள்ளது . கடந்த மாதத்தில் நடைபெற்ற JCM இலாக்காக் குழு கூட்டத்தில்
அளிக்கப் பட்ட பதிலின் விளைவாக அனைத்து LSG /HSG காலியிடங்களும் - உடன் அதற்கான
பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப் பட்டு - வழங்கப் படவேண்டும்-என்று இலாக்கா
உத்திரவு இட்டதால் தற்போது மீண்டும் மாநில அஞ்சல் நிர்வாகம் சுறுசுறுப்பு
அடைந்துள்ளது.
JCM DC கூட்டத்தில்
தமிழகத்திற்கென்று தனியே வழிகாட்டுதல் அளிக்கப் படும் என்று இலாக்கா பதில்
அளித்திருந்தாலும் (பார்க்க MINUTES நகலை ) இதுவரை DTE இல் இருந்து எந்த
பதிலும் வரவில்லை . மேலும் நமது பொதுச் செயலரும் இது குறித்து இலாக்கா முதல்வருக்கு
மீண்டும் நினைவூட்டுக் கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை .
(கடித நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது
)
எனவே தற்போது DATE OF CONFIRMATION
அடிப்படையில் மீண்டும் SENIORITY LIST சரிபார்க்கப் பட்டு தமிழகமெங்கும்
சுற்றுக்கு விடப் பட்டுள்ளது.
'Seniority List
of Postal Assistants in Tamilnadu Circle
as on
01.01.2011
who were
confirmed prior to 04.11.1992'
என்ற அடிப்படையில் 1302 ஊழியர்களின்
பட்டியல் அனுப்பப் பட்டுள்ளது.
மேலும் PROMOTIVE க்கும் அதே
ஆண்டுக்கான DIRECT RECRUIT க்கான பட்டியலும் தனியே அனுப்பப் பட்டுள்ளது. இதன்
அடிப்படையில் ONE TIME CONFIRMATION ஆன PROMOTIVE இன் SENIORITY நிர்ணயிக்கப்
படும் . இதற்கான மாநில நிர்வாகத்தின் கடித நகலை கீழே
பார்க்கவும்.
05.11.2013 க்குள் இந்த SENIORITY
LIST இல் பிரச்சினை உள்ளவர்கள் மனுச் செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்பட்டு
பட்டியல் இறுதி செய்த பிறகு LSG பட்டியல் போடப்படும் .
No comments:
Post a Comment