CHANGE OF HOLIDAY ON THE EVE OF MUHARRAM - POSTPONEMENT OF BI MONTHLY MEETINGS
முகரம்
பண்டிகையை ஒட்டி , நமது வலைத்தளத்தில் நேற்று அறிவித்தபடி , விடுமுறை
தினம் 14.11.2013 க்கு பதில் 15.11.2013 க்கு மாற்றிட நமது மத்திய அரசு
ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் மூலம்
CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE யின் செயலரான
CHIEF COMMISSIONER OF CENTRAL EXCISE இடம் காலை 11.00 மணியளவில்
ஒப்புதல் பெறப் பட்டது.
மதியம் 03.00
மணியளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் இதற்கான
CONCURRENCE E-MAIL மூலம் அளிக்கப் பட்டது . நமது CPMG அலுவலகத்தில்
இருந்து நேற்று மாலை 06.00 மணி வரை இதற்கான உத்திரவு இடப்படவில்லை .ஆகவே இது
குறித்த தகவல் உங்களுக்கு அளிக்கப்படவில்லை .
அதற்கு மேல்
நான்கு மண்டலங்களுக்கும் உத்திரவு அளிக்கப்பட்டதாக உரிய அதிகாரி
தற்போது தெரிவித்தார் . தற்போது அந்த உத்திரவின் அடிப்படையில் இன்று காலை 10.00
மணிக்கு மேல் அனைத்து கோட்டங்களுக்கும் உத்திரவு அந்தந்த மண்டலங்களில்
இருந்து அளிக்கப் படும் .
====================================================================
GENERAL SECRETARY LETTER TO SECRETARY POST ON LEAKAGE OF REVENUE BY TREATING E-POST LIKE REGD/SPEED LETTER
ஈ -போஸ்ட்
எதற்காக இலாக்காவில் அறிமுகப் படுத்தப் பட்டது என்பதையே மறந்து ,
இலாக்காவின் எந்த வித சட்ட விதிகளையும் சற்றும் மதிக்காமல் , குப்பையில்
தூக்கி எறிந்து , தனக்குத் தானே சட்டங்களை இயற்றிக் கொண்டு, வியாபார
அபிவிருத்தி என்ற பெயரில் , வியாபாரம் செய்து , லட்சக் கணக்கான ரூபாய்களை
இலாக்காவுக்கும் அரசுக்கும் நஷ்டமேற்படுத்தும் தென் மண்டல / மேற்கு மண்டல
நிர்வாகங்கள் !
எதைத்
தின்றால் பித்தம் தெளியும் என்பது பாடுபடும் அப்பாவித் தொழிலாளர்களுக்குத்
தெரியவில்லை ! ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் பட்டு , இலாக்கா நஷ்டப் பட்டு ,
சட்டங்கள் குப்பையில் கொட்டப் பட்டு ... இது என்ன நிர்வாகமோ என்று
கேட்டு இலாக்கா முதல்வருக்கு நமது பொதுச் செயலரின் புகார் கடிதம் கீழே
பார்க்கவும் .
No comments:
Post a Comment