Thursday, February 26, 2015

தோழர்களே,தோழியர்களே வணக்கம்
26-02-2015  இன்று மாலை தாம்பரம் கோட்டத்தின் கோட்ட அலுவலகம் முன்பு  தோழர் சிவகுருநாதன் தலைமையில் தாம்பரம் கோட்டத்தில் உள்ள   கேசுவல் லேபர் மற்றும் கண்டிஜென்ட் ஊழியர்கள் நூற்றுக்கும் (100) மேற்பட்டோர்  திரண்டனர் .

 தாம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள புறநிலை ஊழியர் இடங்களை  01-09-1993  முன் பணி புரிந்த கேசுவல் லேபர் மற்றும் கண்டிஜென்ட் ஊழியர்களை பணியில் அமர்த்த  செய்யவேண்டியும் நிலுவையாக உள்ள ARREARS FROM 01.01.2006  தொகையினை கொடுக்கும் பொருட்டும் மற்றும் முழுமையாக ஆறு நாட்கள் பணி புரிந்தால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுக்கவேண்டும் என்றும் கோட்ட அதிகாரிக்கு தாம்பரம் கோட்ட மற்றும் கிளை சங்கங்கள் மூலம் MEMORANDUM தயார் செய்து தாம்பரம் அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் B.செல்வகுமார், அம்பத்தூர் கிளைச்செயலர் தோழர் S.அசோகன் மற்றும் ஆவடி கிளைச்செயலர் தோழர் N.தேவராஜன் மற்றும் தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் சார்பாக தோழர் R.பாஸ்கர் கோட்ட பொருளாளர் ஆகியோர்கள் கையொப்பமிட்டு கோட்ட அதிகாரிக்கு MEMORANDUM கொடுக்கப்பட்டது. 

 கேசுவல் லேபர் மற்றும் கண்டிஜென்ட் ஊழியர்கள் சார்பாக  MEMORANDUM தயார் செய்து இவையும் கோட்ட அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது . அவற்றை முழுவதுமாக படித்த கோட்ட அதிகாரி அவர்கள் 01-09-1993 முன் பணி புரிந்த ஊழியர்களை ஆராய்ந்து காலியாக உள்ள புறநிலை ஊழியர்கள் இடங்களை நிரப்புவதாக கூறினார்.

                                                                                          இப்படிக்கு 
                                                                                   கோட்ட செயலர் 
                                                                           தாம்பரம் கோட்ட சங்கம் 

No comments:

Post a Comment